முகப்பு > அரசியல் > அமைச்சரவையின் மீது பிரதமருக்கு முழுமையான மகிழ்ச்சி இல்லை!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அமைச்சரவையின் மீது பிரதமருக்கு முழுமையான மகிழ்ச்சி இல்லை!

புத்ராஜெயா, பிப். 12-

நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீருக்கு தாம் அமைத்துள்ள அமைச்சரவையின் மீது முழுமையான மகிழ்ச்சி இல்லை என மலேசியாகினி இணையதள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால்தான் பிரதமர், பொருளாதார மேம்பாட்டு திட்டமிடல் பிரிவை உருவாக்கி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் பொருளாதார நிதி வளம் மற்றும் சமூக நலன் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த பிரிவு மிக முக்கிய பங்காற்றும் என பிரதமர் நம்புவதாகவும் அதற்காகத்தான் இந்த புதிய மேம்பாட்டு பிரிவைத் தொடங்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக 4 அம்ச திட்டங்களை முன்னெடுப்பதற்காக பொருளாதார மேம்பாட்டு திட்டமிடல் பிரிவு பிரதமரின் நேரடி பார்வையில் செயல்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை நேற்று பிரதமர் துறை வெளியிட்டிருந்தது.

தொடக்கமாக பொருளாதார திட்டமிடல் ஊக்குவிப்பு பொருளாதார வளர்ச்சி குறித்த செயல் திட்டங்களை இந்த மேம்பாட்டு திட்டமிடல் பிரிவு முன்னெடுக்கும். நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல், நாட்டின் நிதி வளத்தைப் பெருக்குவதற்கு திட்டமிடல் மற்றும் நாட்டு மக்கள் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த பிரிவு செயல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் துன் மகாதீர் புதிய பொருளாதார பிரிவை உருவாக்கி இருப்பது அவர் தாம் அமைத்த அமைச்சரவையின் மீது முழுமையான நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன