அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி சட்டமன்றத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்ற பிளவுபடாத ஆதரவு! – புவனேந்திரன் முனுசாமி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி சட்டமன்றத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்ற பிளவுபடாத ஆதரவு! – புவனேந்திரன் முனுசாமி

செமினி பிப்ரவரி 14-

செமினி சட்டமன்றத் தொகுதியை நம்பிக்கை கூட்டணி மீண்டும் கைப்பற்ற உலு லங்காட் தொகுதி பிளவுபடாத ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் புவனேந்திரன் முனுசாமி கூறினார்.

புதன்கிழமை இரவு மக்கள் நீதிக் கட்சியின் (பி கே ஆர்) துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்வின் அலியுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நம்பிக்கை கூட்டணியின் வெற்றி தான் நமது இலக்கு. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பிரச்சாரத்தையும் தமது தொகுதி மேற்கொள்ளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தொகுதியை கைப்பற்ற டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்படுவோம். தொகுதிகளின் பங்கீடு உறுப்பு கட்சிகளின் செயல்பாடு உட்பட அனைத்தையும் ஒன்றிணைத்து இத்தொகுதியை வென்றெடுப்பதே நமது இலக்கு என்றார் அவர்.

இதனிடையே உலு லங்காட் தொகுதி தலைவர் என்ற முறையில், தொகுதியின் உயர்மட்ட தலைவர்கள் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு அனைத்து இணைந்து செமினி சட்டமன்ற தொகுதியை மீட்டெடுக்க அயராது பாடுபடுவோம் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

இத் தொகுதியில் நம்பிக்கை கூட்டணியை பிரதிநிதித்து போட்டியிடும் ஃபிரி பூமி பெர்சத்து மலேசியா கட்சியின் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவையும் வழங்குவோம் என கூறினார்.

இத்தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தொகுதியை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றுவது அவசியம் என்றும் புவனேந்திரன் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன