அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளை செமினி மக்கள் நம்பக்கூடாது! 2 காரணங்களை முன்வைக்கிறார் தினாளன்
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளை செமினி மக்கள் நம்பக்கூடாது! 2 காரணங்களை முன்வைக்கிறார் தினாளன்

கோலாலம்பூர், பிப். 14-

நடப்பு அரசாங்கத்தில் தற்பொது அமர்ந்திருக்கும் தலைவர்கள் ஒரு காலத்தில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களிடம் வானிலிருந்து மண் வரை அனைத்தையும் காட்டி, மாயை ஏற்படுத்தி ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால் அவர்களின் வர்ணம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் வழக்கறிஞர் தினாளன் ராஜகோபால் கூறியுள்ளார்.

அதில் இரண்டு சம்பவங்களை எடுத்துக்காட்டாக் எடுத்துக் கொள்ளலாம். முன்னர் எதிர்கட்சியாக இருந்தப் பொழுது திருமதி இந்திராகாந்தியின் பிள்ளை வளர்ப்பு வழக்கை எடுத்து வாதிட்டு வந்த அமைச்சர் குலசேகரன் தற்போது அவ்வழக்கை தம்மால் மேற்கொண்டு வழி நடத்த இயலாது எனவும் இவ்வழக்கில் இதுமேலும் தலையீடக்கூடாது என அறிவுரைக்க பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

திருமதி இந்திராகாந்தியின் வழக்கு இன்னும் தீர்க்கபடாமல், அவரிடம் பிள்ளை ஒப்படைக்கபடாமல் இருக்கும் தருவாயில் தன்னை நம்பி வந்த வழக்கை இப்படி நடுவழியில் விடலாமா? அவர் ஒரு வழக்கறிஞர் என்கிற முறையிலும் அமைச்சர் எனும் வகையிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிகவும் சுலபமாக இவ்வழக்கை முடிவுக்கு கொண்டுவரலாம் என தினாளன் குறிப்பிட்டார்.

ஆனால் தனது அரசியல் வாழ்க்கைகாகவும் பதவியை தற்காக்கவும் இவ்விசயத்தில் பின்வாங்கியுள்ளார் என்று அப்பட்டமாக தெரிகிறது. இவர்தான் இப்படி என்றால் இவருடன் இருக்கும் பிற இந்திய பிரதிநிதிகள் யாராவது இவ்விவகாரத்தில் வாயை திறந்தார்களா? ஆட்சி பயம் அவர்களை அமைதியாக்கியுள்ளது என அவர் சாடினார்.

இன்னொரு உதாரணம் கெட்கோ விவகாரம். தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பிஎஸ்எம் கட்சியுடன் உடன் இணைந்து நாங்களும் நியாயம் கிடைக்குவரை போராடுவோம் என்று வீரமுழக்கமிட்ட நடப்பு தலைவர்களும் நெகிரி செம்பிலான் நடப்பு அரசாங்க தலைவர்களும் இரு நாட்களுக்கு முன் அதே பிஎஸ்எம் மாநில முதல்வர் கட்டடதிற்கு முன் நடத்திய போராட்டத்தில் காணவே இல்லை. ஆக அன்று இவர்களின் போரட்டத்தில் கலந்துக் கொண்டது அனைத்தும் ஒரு நாடகம்தானே?

அப்பொழுது இருந்த அரசாங்க்கத்தை எதிர்த்து செயல்பட எந்த ஒரு வாய்ப்பு இருந்தாலும் அதை தவறவிடாது பயன்படுத்திக் கொண்டு இன்று ஆட்சிக்கு வந்த பிறகு நாற்காலியை தற்காக்க சமுதாய பிரச்சனைகளை உதாசிணம் படுத்தும் இவர்களா நமக்காக போராட போகும் தலைவர்கள் ?

இவர்களை வைத்து “ஆட்சிக்கு முன், ஆட்சிக்கு பின்” என்று ஒரு உள்நாட்டு படமே எடுக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களிலே இப்படி அஞ்சி அடங்கி வாழும் தலைவர்களை நம்பி செமினி மக்கள் தங்கள் எதிர்காலத்தை அடக்கு வைக்க போகிறார்களா?

வருகின்ற இடைத்தேர்தலில் செமினி மக்கள் தங்களது எதிர்ப்பபை குறைந்த அளவிலாவது பதிவு செய்தால்தான், அது நமது சமுதாயத்திற்கு சேவை செய்ய இந்த வாய்ச்சவடால் தலைவர்களை தள்ளும் என்பதை நினைத்துப்பார்த்து செமினி மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என தினாளன் ராஜகோபால் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன