அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பேரா மாநில பொதுச் சேவைத் துறை ஆணையத்தில் இந்தியரை நியமிக்காகதது ஏன் ? புலிகேசி கேள்வி !
சமூகம்முதன்மைச் செய்திகள்

பேரா மாநில பொதுச் சேவைத் துறை ஆணையத்தில் இந்தியரை நியமிக்காகதது ஏன் ? புலிகேசி கேள்வி !

ஈப்போ பிப் . 14-

பேரா மாநிலத்தில் பொதுச் சேவை துறை (எஸ்பிஏ) ஆணையத்தில் இந்தியர் நியமனம் செய்யப்படாதது இந்தியர்களிடையே கேளவிக்குறியாகி உள்ளது.

கடந்த காலத்தில் அதில் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்துள்ளனர் . நேற்று மாநில மந்திரி புசார் அதில் தேர்வு செய்யப்பட்ட நால்வருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கியுள்ளார்.

அதில் இந்தியர்கள் இடம்பெறாதது குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் எஸ் . புலிகேசி கேள்வி எழப்பியுள்ளார் .

அந்த நியமனத்தில் வழக்கமாக இந்தியர்கள் இருந்து வந்துள்ளனர் . இதில் மேலும. புதிய உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நியமனத்திலாவது இந்தியர்கள் இடம்பெறவேண்டும் என்று புலிகேசி மாநில அரசாங்கத்தை வலியுறுத்தினா்

நேற்றைய நியமனத்தில் மாநில எஸ். பி. ஏ. தலைவராக மாநில முன்னாள் போலீஸ் தலைவர் டத்தோ ஹாஸ்னான் தலைவராகவும. இதன் உறுப்பினராக மாநில கல்வி இலாகா முன்னாள. உறுப்பினர் டத்தோ மாட் லசிம். முன்னாள் மாவட்ட மன்ற தலைவர்களான உறுப்பினர்களாக டத்தோ கமாரடின் மற்றும் தர்மிசி ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது கறிப்பிடத்தக்கது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன