வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சாய்ஷாவுடன் திருமணம்: உறுதிப்படுத்தினார் ஆர்யா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சாய்ஷாவுடன் திருமணம்: உறுதிப்படுத்தினார் ஆர்யா

சென்னை, பிப். 14-

நடிகர் ஆர்யா – நடிகை சாய்ஷாவுடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அண்மையில் செய்திகள் கசிந்த நிலையில் காதலர் தினமான இன்று இந்த இருவரும் தங்களின் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இந்த இருவரும் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் இருவரும் பெங்களூரில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது.

காதலர் தினமான இன்று ஆர்யா- சாய்ஷா இருவரும் தங்கள் சமூக அகப்பக்கத்தில் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பெற்றோரின் ஆசியுடன் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்கிறோம் என்ற செய்தியையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சாய்ஷா முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 21 வயதான சாய்ஷா 38 வயதான ஆர்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன