அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கட்டாய மரண தண்டனை அகற்றப்படுமா?
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கட்டாய மரண தண்டனை அகற்றப்படுமா?

கோலாலம்பூர், பிப். 14-

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாகவே, கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவது குறித்த பரிந்துரையின் இறுதி முடிவை அமைச்சரவை தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரின் கருத்தை செவிமெடுத்த பின்னரே அமைச்சரவை இறுதி முடிவை அறிவிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர், டத்தோ லியூ வுய் கியோங் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குற்றவாளிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய தரப்புகளிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு, அரசு அதனை பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவது என்பது நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையின் ஒரு பகுதி. அது புதிய அரசாங்கத்தின் நோக்கமும் கூட என்பதால், அமைச்சரவையின் இறுதி முடிவிற்கு காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத் தொடக்கத்தில், அனைத்து குற்றங்களுக்கான கட்டாய மரணத் தண்டயை அகற்றுவது குறித்து அமைச்சரவை முடிவுச் செய்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன