புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கங்களை குவிக்கும் ஶ்ரீஅபிராமி; அபுதாபியில் சாதனை
சமூகம்முதன்மைச் செய்திகள்

பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கங்களை குவிக்கும் ஶ்ரீஅபிராமி; அபுதாபியில் சாதனை

கோலாலம்பூர், பிப் 14-
ஸ்கெட்டிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கங்களை குவித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் வீராங்கனை ஸ்ரீஅபிராமி வியாழக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்று மலேசியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

7 வயது இளம் வீராங்கனையான ஶ்ரீஅபிராமி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்.

இளம் வயதிலேயே இந்த சாதனையை புரிந்த ஸ்ரீ அபிராமி நம் சமுதாயத்தில் மட்டுமின்றி நாட்டில் புகழ்பெற்ற பனிசறுக்கு வீராங்கனையாக வளம் வந்துக் கொண்டிருக்கிறார்.

சிறு வயது முதலே பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஶ்ரீஅபிராமி பயிற்சிகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவார். கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வெல்வதற்காக கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றிப் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மலேசிய பனிச்சறுக்குப் போட்டியில் 7 வயதிற்குட்பட்ட 3 போட்டிகளில் கலந்து கொண்ட அவர் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அதோடு, கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய பனிச்சறுக்கு போட்டியில் 7 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 4 அங்கங்களில் கலந்து கொண்ட ஸ்ரீ அபிராமி 1 தங்கப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துபாயில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சிறந்த ஆற்றலும் திறமையும் கொண்டிருக்கும் ஶ்ரீஅபிராமி பனிச்சறுக்கு விளையாட்டிலும் மேலும் பல சாதனைகளை படைத்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தருவார் என்று அவரது பெற்றோர் நம்புகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன