அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது!

கோலாலம்பூர், பிப். 15-

ஜோகூர், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில், நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், பயங்கரவாதக் கும்பலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டினர் உட்பட அறுவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

2018 டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை அரச மலேசிய போலீஸ் படையின், இ8, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், இரண்டு மலேசியர்களைத் தவிர்த்து சிங்கப்பூர், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் கைதுச் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான்ஶ்ரீ முகமட் புசி அருன் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிரியாவில் உள்ள டாஷ் பயங்கரவாத கும்பலில் இணைந்திருக்கும் மலேசியரான அகெல், சைனாலுடன் அதிகம் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும், 48 வயதான சிங்கை வர்த்தகர் ஒருவர், முதல் நபராக, கடந்தாண்டு டிசம்பர் 19-ஆம் தேதி ஜொகூர் பாருவில் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

ஜோகூர்பாருவில் உள்ள ஃபிரிமசன் கட்டத்தில் தாக்குதல் நடத்துவதற்காக, அகெலுக்கு நிதியுதவி அளித்ததாக நம்பப்படுகின்றது என, இன்று வெள்ளிக்கிழமைவெளியிட்ட அறிக்கை ஒன்றில், டான்ஶ்ரீ முகமட் புசி அருன் கூறியிருக்கின்றார்.

டெஷ் பயங்கரவாதக் குழுவின் போராட்டத்தை ஆதரித்து, இந்நாட்டினரை அக்குழுவில் இணைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, சிலாங்கூர் கிள்ளானில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 31 வயதான துப்புரவு பணியாளர் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, சிரியாவில் உள்ள டெஷ் பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவு வழங்கியதால், வெளிநாட்டில் பணிபுரிந்த 38 வயதான இரண்டு மலேசியர்கள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி,  கைதுச் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

ஆக கடைசியாக, ஜனவரி 28ஆம் தேதி, தெற்காசியாவைச் சேர்ந்த 26 வயது ஆடவன் ஒருவன், குற்றவில் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அனைத்துலக போலீசின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்ற சகநாட்டவருக்கும் பாதுகாப்பு வழங்கிய குற்றத்திற்காக சிலாங்கூர், பூச்சோங்கில் கைதுச் செய்யப்பட்டான்.

கைதுச் செய்யப்பட்டிருக்கும் அனைவரும் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவில் சட்டம், சிறப்பு நடவடிக்கை-யின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று முகமட் புசி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன