ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி சட்டமன்றத் தேர்தல் : சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்! வெற்றி யாருக்கு? பரபரக்கும் தேர்தல் களம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி சட்டமன்றத் தேர்தல் : சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்! வெற்றி யாருக்கு? பரபரக்கும் தேர்தல் களம்

செமினி, பிப். 15-

செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் நால்வர் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகத்தான பலப்படும் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் 30 வயதுடைய முகமட் அய்மான் போட்டியிடுகிறார். இவர் பெர்சத்து கட்சியின் உலு லங்காட் தொகுதியின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சியான தேசிய முன்னணி அம்னோவின் சார்பில் 58 வயதுடைய ஸாகரியா ஹனாபியை களமிறக்க இருக்கிறது.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஸாகரியா ஹனாபியுடன் டத்தோஶ்ரீ முகமட் ஹசான்

மேலும் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் நிக் அசிஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு மார்ச் 2ஆம் தேதி நடைபெறும்.

செமினி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 53 ஆயிரத்து 257 பதிவுபெற்ற வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 67.7 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். மேலும் சீனர்கள் 22.7. விழுக்காட்டினர். இந்திய வாக்காளர்கள் 13.7 விழுக்காடை கொண்டுள்ளனர்.

பிஎஸ்எம் தமது இளம் வேட்பாளரை அறிமுகப்படுத்தியபோது

ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார். தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன