மெல்பேர்ன், பிப் 16-
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற விக்டோரியா பொது நீச்சல் போட்டியில் மலேசியாவின் வில்சன் சிம் ஒலிம்பிக் வீரர் மாக் ஹார்தொனை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 3 நிமிடம்,54.77 வினாடியில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்க் ஹார்தோன் இப்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை பெற முடிந்தது.
சரவாக்கை சேர்ந்த 21 வயதுடைய நீச்சல் வீரரான வில்சம் சிம் இந்த ஆஸ்திரேலிய நீச்சல் போட்டியில் 100 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரிவில் இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார்.
இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் கேமரன் மேக் வோய் தங்கப்பதக்கத்தையும் வென்றார். கேமரன் மேக் வோய் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்சிப் நீச்சல் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றவராவார்.

