எரிந்த காரில் இந்திய இளம் பெண்ணின் உடல் மீட்பு!

0
18

கோலாலம்பூர், ஆக. 14-
எரிந்த காரிலிருந்து இந்திய பிரஜையான இளம் பெண்ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.  ஹர்னீட் டில்லன் (வயது 18) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடல் ஹர்த்தாமாஸ் ஹெய்ட்ஸ் பகுதியிலுள்ள அவரது அம்மாவின் உறவினரின் வீட்டின் முன்புறம் எரிந்த நிலையில் இருந்த ஹூண்டாய் ரகக்காரின் உள்ளே விடியற்காலை மணி 4.22 அளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஆர்.முனுசாமி தெரிவித்தார்.

மருந்து உட்கொண்ட பின்னர் படுக்கையறையில் அந்த பெண் படுத்திருந்ததை ஆகக் கடைசியாக பின்னிரவு 12.30 மணியளவில் தாம் பார்த்ததாக அப்பெண்ணின் அத்தை தெரிவித்ததாக முனுசாமி கூறினார். சொந்தமாக படித்து வந்த அந்த இளம் பெண் 2015ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டில் இருந்து வந்துள்ளார். கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவின் தடயவியல் பிரிவு மற்றும் போலீஸ் மேற்கொண்ட தொடக்கக்கட்ட சோதணையில் அப்பெண்ணின் மரணத்தில் குற்ற அம்சம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வித நோயினால் அவதியுற்று வந்த அந்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் தனது அத்தையில் வீட்டில் தங்கியிருந்ததாகவும் அறியப்படுகிறது. அப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதணைக்காக கோலாலம்பூர் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.