ஈப்போ பிப் 19-

ஆசிரியர் தொழில் சவால்கள் நிறைந்தவை. அதனை எதிர்க்கொண்டு சமாளிக்கும் பக்குவத்தை பெற்றிருக்கவேண்டும் என்று விரிவுரையாளர் மோகன் பழனியாண்டி வலியுறுத்தினார்.

இந்திய மாணவர்கள் பலர் ஆசிரியர் தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனைக் கடப்பது சுலபமல்ல சவால்களை சமாளித்துக்கொண்டால்  சிறந்த நிலையை அடைய வழிவகுக்கும் என்றார்.

ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை விரிவுரையாளர் சேவையாற்றி பணி ஓய்வு மற்றும் 60 வயது மணிவிழா நிகழ்வில் அவர் இவ்வாறு ஏற்புரையில் பேசினார்.

இங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வு ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தமிழ்த் துறை விரிவுரையாளர் முனைவர் சேகர் நாராயணன் தலைமையில்  நடைபெற்றது். இதில் அதன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய முனைவர் சேகர் நாராயணன் ஆற்றிய உரையில் மோகன் பழனியாண்டி  தெலுக் டத்தோ  தோட்டத்தில் ஏழ்மை நிலையில் பிறந்து பல சவால்களை சந்தித்து விரிவுரையாளராக உயர்வுக்கண்டார்  இன்று  மாணவர்களின் சூழ்நிலைகளை அறிந்து சேவையை வழங்கி  வருவதை எடுத்துரைத்தார்.

இதில் கலந்து கொண்ட என்.பாஸ்கரன், எஸ். மோகன் குமார், வி. அருள்நாதன், எஸ் குணசீலன் மற்றும் முத்துக்குமார் ஆகிய விரிவுரையாளர்கள் மோகன் பழனியாண்டியின் சேவை குறித்து புகழாரம் சூட்டினர் .