௭டிசன் விருது விழா: சிறந்த இசையமைப்பாளராக ஜெய் தேர்வு! 

0
4

கோலாலம்பூர், பிப். 19-

சென்னையில்  நடைபெற்ற ௭டிசன் விருதளிப்பு விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் சிறந்த  இசையமைப்பாளராக நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில்  ஒருவரான ஜெய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த  விருது விழாவில்  ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் சிறந்த பாடலாசிரியர் விருதை அருள்செல்வன் செல்வசாமி வென்றார்.

12 ஆவது ஆண்டாக நடைபெற்ற ௭டிசன் விருது விழாவில் சிறந்த டீசர், சிறந்த கருப்பொருள், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த  பாடலாசிரியர்  மற்றும் சிறந்த பாடகர் ஆகிய ஐந்து விருதுகளை   ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் வென்றது.

அவ்வகையில்  சிறந்த டீசருக்கான விருதை ஆஸ்ட்ரோ புத்தாக்க இயக்குநர் ராஜேந்திரன் ராஜமாணிக்கமும் சிறந்த கருப்பொருளுக்கான விருதை ஆஸ்ட்ரோ நிகழ்ச்சி தயாரிப்பாளர் குமரன் ஆறுமுகமும் தட்டிச் சென்றனர்.

2018 ஆம் ஆண்டின்  சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின்  சிறந்த பாடகருக்கான விருதை அன்பழகன் அன்பரசன்  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.