முகப்பு > அரசியல் > டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி வழக்கு
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி வழக்கு

கோலாலம்பூர், பிப் 20-

அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி மீது 260 மில்லியன் வெள்ளி உட்படுத்திய நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி யாயாசான் அகால் பூடி எனும் அறைக்கட்டளைக்குச் சொந்தமான அந்தப் பணத்தை திஎஸ் கொன்சல்தன்ஸி என்ட் ரிசோர்ஸிற்கு மாற்றியதாக இன்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

அந்த அறக்கட்டளையின் தலைவரான டத்தோஸ்ரீ ஸாஹிட் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 409இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படியும், அபராதமும் விதிக்கப்படும்.

இந்தக் குற்றத்தை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். வரும் பிப்ரவரி 28ஆம் தேதி இந்த வழக்கின் மறூவிசாரணை நடைபெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன