திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசியாவின் முன்னணி நகைச்சுவை கலைஞர் பெருமாள் காலமானார்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவின் முன்னணி நகைச்சுவை கலைஞர் பெருமாள் காலமானார்

கோலாலம்பூர், பிப் 21-

ஏ.எம்.ஆர் நகைச்சுவை குழுவின் மூலம் மலேசியாவில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த பெருமாள் இன்று காலை காலமானார்.

நீண்ட நாட்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பலர் நேரடியாகச் சென்று நலம் விசாரித்து அவர் நலம் பெற்று மீண்டும் கலைத்துறைக்கு திரும்ப வேண்டும் என்ற தங்களின் பிரார்த்தனைகளையும் முன்வைத்தனர்.

இவர் நிச்சயம் மீண்டும் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. பெருமாள் காலமான செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கலைத் துறையைச் சார்ந்த அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்து 1990 ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வலம் வந்த ஏ.எம்.ஆர் நகைச்சுவை குழுவில் இணைந்து இருந்த பெருமாள் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் ஒட்டுமொத்த மலேசிய ரசிகர்களையும் குழுவினர் கட்டிப்போட்டனர். முருகேசன் உடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென கலைத் துறையைச் சார்ந்த அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். பெருமாள் அவர்களின் இழப்பு மலேசிய கலைத்துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு.

மேல் விவரங்களுக்கு 016-2866756 அல்லது 018-3555479 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன