2000 ஏக்கர் நில விவகாரம் ! ஒத்துழைப்பு இல்லை என்றால் எந்த நன்மையும் கிடைக்காது -சிவநேசன் திட்டவட்ட அறிவிப்பு !

0
3

ஈப்போ பிப் 20-

பேரா மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இந்த நிலையில் இந்திய மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2000 ஏக்கர்  நிலத்தை நிர்வகித்து வரும் அதன் இயக்குனர் வாரிய உறுப்பினர்கள் ஒத்துழப்பு வழங்காதது குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிஙநேசன் கவலைத்  தெரிவித்துள்ளார்.

இம்மாநிலத்தில் அரசு சார்பற்ற அமைப்புகள் உட்பட தனியார் நிறுவனங்கள் தங்களின் சில தேவைகளுக்கு மாநில அரசாங்கத்தின் உதவிகளை நாடவேண்டியிருக்கும் அப்போது தம்முடைய உதவிகள் தேவைப்படும்.

அந்த நிலையில் இந்திய சமுதாயத்ததின் மாபெரும் கல்வி திட்டமான 2000 ஏக்கர் நில திட்டத்திற்கு உதவிகள் வழங்க இன்னமும் தயாராக இருப்பதாகவும் அதனை நிர்வாகித்து வரும் பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்ததின் போக்கு குறித்து சிவநேசன்  சாடினார்.

அந்த அறவாரியம் சிறப்புடன் செயல்பட அந்த அறவாறியத்தில் மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்து மூவருக்கும் மத்திய அரசாங்கத்தை பிரதிநதித்து இருவருக்கும் இடம் பெற வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று செய்த முறையீட்டை அது நிராகரித்துள்ளது.

அது தொடர்பாக இன்று அந்த அறவாரியத்தின் தலைவர் எஸ். முனியாண்டி கையெப்பம் இட்ட கடிதம் பெற்றுள்ளதாக மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.

என்னை பொறுத்தவரை இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு சேவையை வழங்கிட செய்ய தயாராக இருக்கிறேன் அந்த வாய்ப்பபினை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை .

சமுதாயத்தின் நலனை அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் இறுமாப்புக்கொள்ளக் கூடாது என்பதை அவர் எச்சரித்தார்.

இந்த நாட்டில்  உள்ள இந்தியர்கள் நிலை குறித்து நாம் அனைவருக்கும் நன்கு தெரியும் அவர்களின் மேம்பாட்டிற்கு உதவி செய்ய நோக்கம் கொண்டு நான் ஒத்துழைக்க தயாராக உள்ளேன் . அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை இதனால் இழப்பு சமுதாயத்திற்கு என்பதை குறிப்பிட்டார் .

இங்கு நடைபெற்ற செய்தியாள்கள் கூட்டத்தில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி்.சிவகுமார்,  சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன்,  வழக்கறிஞர் எம்.மதியழகன், மாநில தமிழாசிரியர்கள சங்கத் தலைவர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துக்கொண்டவர்களில் அடங்குவர் .

கடந்த 2009ஆம் இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக இந்த 2000 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் வழங்கியது.

அதற்கு 2013ஆம் நிலப்பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை மேம்படுத்த தேசிய நில நிதி கூட்டறவுச் சங்கம் வெ. 12 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது.

இதில் கலந்துக்கொண்ட கேசவன் மற்றும் சிவக்குமார் கருத்துரைப் போது, மாநில அரசாங்க பிரதிநிதிகள் பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தில் இடம் பெறுவதின் நன்மை கிடைக்கும் என்பதை தெளிவுப்படுத்தினர்.