பெட்ரோல் விலை அதிகரிப்பு; டீசல் விலையில் மாற்றமில்லை

0
3

பெட்டாலிங் ஜெயா, பிப் 22-
பிப்ரவரியின் நான்காவது வாரத்தில் ரோன்95, ரோன் 97 பெட்ரோலின் விலை 10 காசு அதிகரிக்கப்படவுள்ளது. இதில் டீசல் விலை நிலைநிறுத்தப்படும்.

கடந்த வாரம் 1 வெள்ளி 98 காசாக இருந்த ரோன் 95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 08 காசாகவும், 2 வெள்ளி 28 காசாக இருந்த ரோன் 97இன் விலை 2  வெள்ளி 38 காசாகவும் விற்கப்படும் என நிதியமைச்சு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீசல் விலை 2 வெள்ளி 18 காசாக நிலை நிறுத்தப்படும்.

இந்தப் புதிய விலை நாளை சனிக்கிழ்மை பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 1ஆம் தேதி  வரை அமலில் இருக்கும்.