ஈப்போ, பிப் 23-

இளைஞர்களின் கனவு நாயகன் டாக்டர் ஏ.பிஜே அப்துல் கலாம் அவர்களின் 1௦ கோட்பாடுகளின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான சுய மாற்றத்தை நோக்கி ஒரு பயணம் எனும் கருப்பொருளை  மையமாகக் கொண்டு  சுய உருமாற்றப்  பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15 வயது முதல் 23 வயதிற்குப்பட்டவர்களுக்காக பிரதியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயிலரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஈப்போ, ஜாலானா காசாலி ஜாவி விளையாட்டு அரங்கில் காலை 8.30 தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

உலகமே போற்றும் இந்தியாவின் முன்னால் அதிபர் ஏபிஜே அப்துல் கலாம் சாதாரண நிலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய போதிலும், இன்று லட்சக்கணக்காண இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்வதற்கு அவர் உருவாக்கிய வாய்ப்புகளே காரணமாகும். வேலை வாய்ப்பே இல்லாத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் பயின்று இன்று அந்த துறையை இந்திய நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற செய்தவர் ஏபிஜே அப்துல் கலாம்.

அதேபோன்று இன்றைய இளம் தலைமுறையினரான மாணவர்களும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பதை விட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும்  இளைஞர்களுக்குள்  ‘தேடலை’ விதைக்க வேண்டும் என்பதையும் அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் அடித்தளமாகும் என்பதனை வலியுறுத்த இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். இது குறித்து மேல் விவரங்கள் பெறுவதற்கு 05-255 5558 / 017-724 2558 ஆகிய எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.