பேரா அரசாங்கத்தில் ஏழு இந்திய கிராமத் தலைவர்கள் நிலை நிறுத்தப்பட்டனர்!

ஈப்போ பிப் 22-

பேரா மாநிலத்தில் ஏழு இந்தியர் கிராமத் தலைவர்கள் நிலை நிறுத்தப்பட்டனர். எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் கிராமத் தலைவர்களாக நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கூறினார்.

இதில் நியமனம் செய்யபட்டவர்களில் அறுவரின் பெயர்களை வெளியிட்ட அவர் கம்போங் சுன் லீ கிராமத் தலைவரின் பெயர் தவிர்க்க முடியாத காரணத்தால் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

கிராமத் தலைவருக்கு சிவநேசன் உறுதி கடிதத்தை வழங்குகிறார்

கம்போங் இன்ரா கிராமத் தலைவராக பி. மாதவன், துன் சம்பந்தன் கிராமத் தலைவராக ஆர் . ஆறுமுகம், புண்டுட் கிராமத் தலைவராக பி. சற்குணன் , கிந்தா வெலி கிராமத் தலைவராக டி. ராகேந்திரன், கம்போங் காமாட்சி கிராமத் தலைவராக பி. அருள் பிரகாசம், சுங்கை சுமுன் கிராமத் தலைவராக எஸ். ஞானசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர், இங்குள்ள மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் நியமனம் செய்யப்பட்ட அறுவருக்கும் பதவி சான்றிதழ் வழங்கி அவர் செய்யவேண்டிய பொறுப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வில் அரசாங்க மருத்துவ மனைகளில் அதன் கணகாணிப்பாளர்களாக 33 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள தகவலையும் சிவநேசன் தெரிவித்தார். அதன் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது்.

அந்த நியமனத்தில் அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவர் அதில இந்து சங்கத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.