புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மக்கள் தொலைக்காட்சியில் பேரா மாநில கலைஞர்கள்!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மக்கள் தொலைக்காட்சியில் பேரா மாநில கலைஞர்கள்!!

சென்னை, பிப். 24-

தமிழகத்தின் மக்கள் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ” தெய்வீக ராகம் ” எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், நியூ மெஸ்ட்ரோ இசைக்குழுவின் தலைவர் திரு. JJ டேவிட்சன் அவர்களின் அழைப்பின் பேரில், நம் நாட்டின் ” பேரா மாநில வெண்ணிலா ஆட்ஸ் இந்திய கலை கலாச்சார சங்கத்தின் ” தலைவர் எ. லோகநாதன் தலைமையில் அவரது குழுவினர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்து வருகின்றார்கள்.

அவரது ஏற்பாட்டில் நம் நாட்டு மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக கலைஞர் தொலைக்காட்சியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் பாடி வருகின்றனர்.

கடந்த 16/2/19. முதல் 24/2/19 வரை மக்கள் தொலைக்காட்சியின் ” தெய்வீக ராகம் ” நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை மிகச் சிறப்பாக முடித்து விரைவில் நாடு திரும்பவுள்ளனர். நம் நாட்டுக் கலைஞர்களை, தமிழக கலைஞர்கள் நன்கு ஆதரித்து அவர்களது அன்பான வாழ்த்துகளையும் அள்ளி வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன