புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்.ஜி. ஆர் ! – காந்தி கண்ணதாசன்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்.ஜி. ஆர் ! – காந்தி கண்ணதாசன்

ஈப்போ பிப் 24-

இந்தியாவில் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூன்று முறை தமிழகத்தின் முதலமச்சாரக பொறுப்புகள் வகித்த அவர் கடைசியில் அவருக்கு இருந்த சொத்துகள் அனைத்தும் இன்று தர்மகாரியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இன்று தமிழ் நாட்டு அரசியவில் சொத்துகள் சம்பாதிப்பது, தங்களின் வாரிசுகளை அரசியலில கொண்டு வரும் நோக்கத்தைக கொண்டதாக உள்ளது மக்களின் சமுக நல கரியங்களில அக்கறைக் கொள்ளாதது குறித்து கவலை அளிக்கிறது என்று கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் கூறினார்.

எம்.ஜி்ஆர். ஆட்சியில் மக்களின் நலனில் கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று சுய நலத்திற்காக அரசியல் நடத்தப்பட்டு வருவது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ இந்திய சமுக நல கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பெ. பாலையா ஏற்பாட்டில் எம். ஜி் ஆர். 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ”காலத்தை வென்றவன்” நிகழ்ச்சியில். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காந்தி கண்ணதாசன் இவ்வாறு தமது உரையில் குறிப்பிட்டார.

ஈப்போ அருளமிகு மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் 7ஆவது ஆண்டாக காலத்தை வென்றவன் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் கலந்துகொண்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இதே மண்டபத்தில் அவரது மகன் காந்தி கண்ணதாசன் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று பாலையா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வி. இளங்கோ தொடக்கி வைத்து உரையாற்றினார்.

டான்ஸ்ரீ. ஜி். ராஜூ . , மகப் பேறு மருத்துவர் டாக்டர் ஜெயபாலன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் டத்தோஶ்ரீ சரவணன், கா ந்தி கண்ணதாசன், கமலாடசி ஆறுமுகம் , ரகுநாதன் , நிருபர் சந்திரசேகரன் , இரா. மாணிக்கம் , டத்தோ மாரிமுத்து, டத்தோ எஸ். ஏ. சி. குமரன், சந்தரலிங்கம் ஆகியோருக்கு எம். ஜி் ஆர். விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன