ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி தொகுதியைக் கைப்பற்ற தேசிய முன்னணி தீவிரம்…!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி தொகுதியைக் கைப்பற்ற தேசிய முன்னணி தீவிரம்…!

கோலாலம்பூர். பிப் 24-

செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேசிய முன்னணி தீவிரமாக போராடி வருகிறது.தற்போது 56 இடங்களைக் கொண்ட சிலாங்கூர் சட்டமன்றத்தில் 4 இடங்களை மட்டுமே தேசிய முன்னணி கொண்டுள்ளது.

மார்ச் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் மாநில சட்டமன்றத்தில் தனது தொகுதியை ஐந்தாக அதிகரித்து கொள்ள முடியும். அதிகரித்து கொள்ள முடியும்.

பல ஆண்டுகாலம் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த செமினி சட்டமன்ற தொகுதியை கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் முதல்முறையாக நம்பிக்கை கூட்டணி கைப்பற்றியது.

நம்பிக்கை கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற பெர்சத்து கட்சியின் பக்தியார் முகமட் நோர் இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி மாரடைப்பினால் காலமானதை தொடர்ந்து செமினி தொகுதி காலியானது. இடைத்தேர்தலில் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கைகூட்டணியின் சார்பில் பெர்சத்து கட்சியை சேர்ந்த.முகமட் அய்மான் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் தேசிய முன்னணி சார்பில் ஸாகாரியா ஹனாபி, சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் மற்றும் பி எஸ் எனப்படும் மலேசிய சோசலிச கட்சியைச் சேர்ந்த நிக் அஸிஸ் ஹபிக் போட்டியிடுகின்றனர்.

செமினி இடைத்தேர்தலுக்கான 14 நாள் பிரச்சாரம் மார்ச் ஒன்றாம் தேதி நள்ளிரவு மணி 11.59 க்கு முடிவடைகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களை சந்திப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் கூட்டங்கள் மட்டுமின்றி வேட்பாளர்கள் வாக்காளர்களை தனித்தனியாகவும் சென்று சந்தித்து வாக்குவேட்டையாடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன