ஈப்போ பிப் 25-
சுமார் 730 மாணவர்களைக்  கொண்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கூடம்.

பேரா மாநிலத்தில் அதிகமான மாணவர்களைக்  கொண்டு இயங்கி வரும் இப்பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதில்  வகுப்பறைகள் பற்றாக்குறை விவகாரம் தலைத்தூக்கியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு தீர்வுக்காண இதனை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லவிருப்பதாக மாநில அரசு ஆடசிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கூறினார்.

தற்பொழுது 16 வகுப்பறைள் உள்ளது. மேலும் 18 வகுப்பறைகள் தேவைகள் குறித்து முன் வைக்கப்படும்.

இப்பள்ளியின் 66ஆவது ஆண்டு திடல் தடப்போட்டி விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்த அவர் பள்ளிக் கூடத்தின் நிலவரங்களை தெரிந்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இப்பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக் குறையனால் அதிகமான மாணவர்களை சேர்த்துக்கொள்ள இயலாதது குறித்து பெற்றோர்கள் பலர்  குறைப்பட்டு வருகிறார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வுக் காண நடவடிக்கை தேவை என்பதைத் தெரிவித்த அவர் பாலர் பள்ளியில் மாணவர்கள் அதிகரிப்பையும் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த வட்டாரத்தில் தலை சிறந்த பள்ளியாக இப்பள்ளி உருவாகி வருகிறது் .  இப்பள்ளிக் கூடம் தேவைக்கு முன் வைத்த நிதிக்கு கடந்த வாரம் வெ.10,000 வழங்கியுள்ளதாகவும் அதற்கு மேலும் 10, 000 வெள்ளியை அங்கிகரிப்பதாகவும் சிவநேசன் அறிவித்தார்.

இப்பள்ளிக் கூடம் சிறந்த முறையில் செயல்படுவதற்கு தலைமை ஆசிரியை பத்மினி, ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் மற்றும் வாரியக் குழு உறுப்பினர் அனைவரையும் பாராட்டினார்.

இம்மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு இதுவரை வெ.125,000 நிதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார் .