புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > அனைத்திலும் தல அஜித் ரசிகர்கள் தான்!
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அனைத்திலும் தல அஜித் ரசிகர்கள் தான்!

சைபர்ஜெயா, பிப்ரவரி 25-

மலேசிய தல அஜித் நற்பணி சங்கத்தினர் அண்மையில் காஷ்மீர் வெடிகுண்டு விபத்தில் பலியான ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வு சமூக தளங்களில் வைரலாக பேசப்படுகின்றது.

மலேசிய கலைத்துறை சார்ந்த படைப்புகளுக்கும் தொடர்ந்து முன்னின்று ஆதரவு வழங்கும் மலேசிய தல அஜித் நற்பணி மன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பள்ளி சமூக நிகழ்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்கள் மலேசியாவில் வெளிவரும் போது அதனை கொண்டாட்ட மயமாக்கும் நடவடிக்கைகளிலும் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

பொங்கலுக்கு வெளியீடு கண்ட விஸ்வாசம் திரைப்படமும் மலேசியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ய சமூக தளங்களில் தொடர்ந்து இவர்கள் விளம்பரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சைபர் ஜெயா லெக் கிளப்பில் நடந்தது. அங்கு தீபத்தை ஏற்றி இவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உயிர் நீத்த அத்தனை ராணுவ வீரர்களும் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார்கள் என மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார். வீர மரணம் அடைந்த அத்தனை இராணுவ வீரர்களுக்கும் மலேசிய தல அஜித் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன