ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பாஸ் ஆதரவு எனக்கு தேவையில்லை – துன் டாக்டர் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பாஸ் ஆதரவு எனக்கு தேவையில்லை – துன் டாக்டர் மகாதீர்

கிள்ளான், பிப். 26-

நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் ஆதரவையும் தமது பலத்தையும் நிரூபிப்பதற்கு பாஸ் கட்சியின் ஆதரவு தமக்கு தேவையில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக கூறி இருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு போதுமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 விழுக்காடு ஆதரவுதான் எனக்கு தேவைப்படுகின்றது. அது போதுமான அளவில் இருக்கும் நிலையில் பாஸ் கட்சியின் ஆதரவு தமக்கு தேவையில்லை என அவர் கிள்ளானில் நடந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் தமக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் தாராளமாக தெரிவிக்கலாம். ஆனால் இனியும் கடிதம் கையெழுத்தானது கடிதத்தின் வாயிலாக முழுமையான ஆதரவு தருகிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன