ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிங்கப்பூரில் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக டாக்டர் பாலகிருஷ்ணன் நியமனம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

சிங்கப்பூரில் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக டாக்டர் பாலகிருஷ்ணன் நியமனம்

சிங்கப்பூர், பிப் 25-

சிங்கப்பூரின் வெளியுறவு விவகார அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூர் மலேசிய இருவழி பேச்சுவார்த்தையில் அக்குடியரசின் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இடது கையில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அடிப்படை வசதிகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான காவ் பூன் வான் மருத்துவ விடுப்பில் இருப்பதால் டாக்டர் விவியன் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

சில போக்குவரத்து விவகாரங்களில் மலேசியாவுடனான கலந்துரையாடல்கள் தொடர்ந்து சிறந்து முறையில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்த நியமனம் அவசியம் என்று தனது அகப்பக்கத்தில் பிரதமர் துறை அலுவலகம் விவரித்தது.

இதர போக்குவரத்து விவகாரங்களோடு விநியோக விவாத செயற்குழுவில் டாக்டர் விவியனுக்கு முதிற்நிலை அமைச்சர்களான டாக்டர் லம் பின் மின் மற்றும் டாக்டர் ஜனில் மற்றும் முதிர்நிலை நாடாளுமன்ற செயலாளர் பா யம் ஹிங் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்குவர் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன