முகப்பு > அரசியல் > செமினியில் மேலும் 300 பேர் பெர்சத்து கட்சியில்  இணைந்தனர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

செமினியில் மேலும் 300 பேர் பெர்சத்து கட்சியில்  இணைந்தனர்

செமினி, பிப். 25-

செமினி வட்டாரத்தைச் சேர்ந்த 300 பேர் பெர்சத்து கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து இக்கட்சி இங்கு வலுப்பெற்று வருவதைக் காண முடிகிறது.

மலேசிய ஆச்சே தொழில் முனைவர் ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் தேசிய பாரம்பரிய தொழில் முனைவர் அமைப்பு ஆகிய இரு அரசு சார்பற்ற அமைப்புகளே இக்கட்சிக்குள்  புதிதாக உறுப்பினர்களைச்  சேர்த்தவை என்று அறியப்படுகிறது.

இப்புதிய உறுப்பினர்கள் செமினி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான பெர்சத்து கட்சியைச்  சேர்ந்த  முகமது அய்மான் ஜைனாலிக்கு ஆதரவு அளிப்பர் என்று இக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் அபு பாக்கார் யாஹ்யா நம்பிக்கை தெரிவித்தார்.

“பெர்சத்து எப்போதும் புதிய உறுப்பினர்களை வரவேற்கிறது. இந்த அடிப்படையிலேயே இவர்களையும் ஏற்றுக் கொண்டது. கட்சியின் மீதுள்ள நன்மதிப்பின்  காரணமாகவே இவர்களும் இக்கட்சியில் இணைந்ததாக நம்புகிறேன்” ௭ன்றார் அபு பக்கார்.

புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்கள் செமினியில் வசிக்கும் சபா மற்றும் ஆச்சேவைச் சேர்ந்தவர்கள் என்று அவர்  சொன்னார்.

உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பு விண்ணப்பங்கள் பரீசீலனைக்கு உட்படுத்தப்படும். அதோடு, இவர்கள் நீல அடையாள அட்டைகளை வைத்திருக்கும் நாட்டின் பிரஜைகள் என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம் ௭ன்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன