புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பள்ளிவாசல் நுழைவாயிலில் ஆலய சிலைகள்; ஊகத் தகவலைப் பரப்ப வேண்டாம் – அமைச்சர் வேதமூர்த்தி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பள்ளிவாசல் நுழைவாயிலில் ஆலய சிலைகள்; ஊகத் தகவலைப் பரப்ப வேண்டாம் – அமைச்சர் வேதமூர்த்தி

கோலாலம்பூர், பிப். 25-

கிள்ளான் தாமான் பெண்டாமார் இண்டா, சபிலுல் ஹூடா பள்ளி-வாசலில் ஆலய வழிபாட்டு சிலைகள் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊக செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதன் தொடர்பில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, சம்பந்தப்பட்ட சூராவ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை சாதுர்யமாக கையாள்வதற்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி பாராட்டு தெரிவித்த வேளையில், ஒற்றுமை அமைச்சக அதிகாரிகள் அந்தப் பள்ளிவாசலுக்குச் சென்று இதற்கு சுமூகமான தீர்வு காண்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழக சுங்கை லோங் வளாகத்தில் தொழில் பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.வேதமூர்த்தி, மேற்கண்டவாறு பேசினார்.

குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அப்பள்ளிவாசலின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் கடந்த வாரத்தில் ஆலயச் சிலைகள் வைக்கப்பட்டதாக பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் இரு சிலைகள் நுழைவாயிலில் வைக்கப்பட்டதாக சூராவ் உறுப்பினர்கள் மேலும் தெரிவித்த நிலையில் போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன