டெல்லி பிப் 26-

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.

அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பில் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மிராஜ் 2000 விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மொத்தம் 12 விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இறந்தவர்கள் எல்லோரும் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் தீவிரவாதிகள் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புகொண்டு இருக்கிறது. ஆனால் இதனால் யாரும் பலியாகவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி இருக்கிறது.