செமினி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை நிற்கும்

0
8

கோலாலம்பூர், பிப் 26-

செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று அதன் தலைவர் ஜெயபாலன் தெரிவித்தார்.

மீண்டும் தன்னை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு  தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு பள்ளி மற்றும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாம் கடமை பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 42ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கத்  கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளின் காட்டிலும் இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

சங்கத்தின் துணைத் தலைவராக திரு.சுஜேந்திரன், செயலாளராக திரு.விஜேந்திரன், துணைச் செயலாளராக திருமதி சுமதி, பொருளாளராக திருமதி ராஜேஸ்வரி, மற்றும் செயலவையினராக திரு.ரவிசந்திரன், திரு.உலகநாதன், திரு.ஜெயபிரகாசம், திருமதி கலை, திருமதி காந்திமதி, திரு.சதிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.