10 காசுக்கு பிரியாணி; பினாங்கு உணவகத்தில் அதிசயம்

0
18

பினாங்கு பிப் 26-

10 காசுக்கு பிரியாணி மற்றும் தக்காளி சாதம் என பினாங்கு மாநிலத்தில் ஜாலான் பொண்டோக் உபேவில் உள்ள உணவகத்தில் தான் இந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும் காப்பி, தேநீர் மற்றும் சீரப் பானங்கள் கூட ஒரு கிளாஸ் 10 காசு என விற்கப்படுகிறது.

பயனீட்டாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி இருக்கும் இந்த சிறப்பு சலுகை விலையில் உணவு மற்றும் பானங்களை விற்பது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அந்த உணவகத்தின் உரிமையாளரான இப்ராஹிம் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

ஐந்து வெள்ளிக்கும் குறைவாக உணவு மற்றும் பானங்களை முழுமையாக பயனீட்டாளர்கள் பெறமுடியுமென இப்ராகிம் கூறினார். உலகில் மற்ற இடங்களை விட எனது கடையில் உணவுகளும் பானங்களும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் வாங்க கூடிய விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அந்த அடிப்படையில் தான் மிகவும் குறைந்தl விலையில் உணவுகளை விற்பனை செய்து வருவதாக இப்ராஹிம்  தெரிவித்தார்.

எனது கடையில் உணவுகளை உட்கொண்டுவிட்டு  பணத்தை கொடுக்கும் போது அது பயனீட்டாளர்களுக்கு சுமையாக இருக்காது என அவர் கூறினார்.

எனது கடையில் தினசரி சுமார் 400 பேர் உணவு உட்கொள்ள வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என இப்ராஹிம் தெரிவித்தார்.

தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாரா உயர் தொழில் திறன் கல்லூரிக்கு எதிரே தமது கடை திறந்து இருக்கும் என்றும் அவர் கூறினார் .தினசரி 180 வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பிரியாணி மற்றும் தக்காளி சாதத்தை தயாரிப்பதாகவும் இப்ராஹிம் கூறினார்.

தமது தந்தையிடம் இருந்து கடந்த 15 ஆண்டு காலமாக இந்த கடையை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.  இதற்கு முன் அருகிலுள்ள அங்காடி கடையில் நான் வியாபாரம் செய்து வந்தேன் கடந்த மே மாதத்திலிருந்து புதிய இடத்திற்கு மாறி விட்டேன் .

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே நான் இங்கு உணவகம் திறந்து விட்டேன். அப்போது இருந்து இலவசமாகவே உணவை வழங்கி வருகின்றேன் .சில வாடிக்கையாளர்கள் எனது கடையில் வந்து சாப்பிடுவதற்கு வெட்கப்படுவார்கள் பொதுவாக பணம் கொடுக்காமல் உணவருந்துவதற்கு வாடிக்கையாளர்கள் வெட்கப்படுவார்கள். எனவேதான் ஒரு பிளேட் சாதம் குறைந்தபட்சம் 10 காசு என்ற விலையில் விற்பனை  விற்பனை செய்வதற்கு தான் முடிவு செய்வதாக இப்ராஹிம் தெரிவித்தார்.