அம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டிட விவகாரம்; தீர்வுகாண கணபதிராவுடன் சந்திப்பு 

0
3

கோலாலம்பூர், பிப் 26-

அம்பாங் தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டிடத் திறப்பு விவகாரம் காரணமாக அம்பாங் பண்டான் இந்திய சமூகத் தலைவர்களான நடேசனும் இராசேந்திரனும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவை சந்தித்தனர்.

ஏற்கனவே அப்புதிய கட்டணத்திற்கான உறுதி சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் அக்கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படாமல் இருப்பது கவலைக்கிடமான ஒரு விசயமாகும்.

இதற்கிடையில் செமினி தமிழ்ப்பள்ளியின் விவகாரம் பற்றி துணைக் கல்வி அமைச்சரிடம் நடத்திய முக்கிய சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு, அம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டிட விவகாரம் பற்றி கணபதிராவுடன் பேசப்பட்டதாக இந்திய சமூகத் தலைவர்களின் தலைவரான இராசேந்திரன் இராசப்பன் கூறினார்.

450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் ஒரு நேரப் பள்ளியாக இயங்கிவரும், அம்பாங் தமிழ்ப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால், இந்த இணைக்கட்டிடம் விரைவில் திறப்பு விழா காண்பதற்காக பெற்றோர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பாரத்துக் கொண்டிருக்கின்ற வேளையில், இதற்கு முதல் தீர்வாக , இப்பள்ளியின் தலைமை ஆசிரியை, பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர், அம்பாங் நகராண்மைக் கழக உருப்பினர்கள் உள்ளிட்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவுடன் ஒரு சந்திப்புக் கூட்டதை அடுத்த வாரம் ஏற்பாடு செய்திருப்பதாக அறம் இயக்கத்தின் தலைவரும் லெம்பா ஜெயா சட்டமன்றத்தின் இந்திய சமூகத் தலைவருமான நடேசன் வரதன் தெரிவித்தார்.