ராகாவின் சிறந்த 500 போட்டியில் ரிம 2000 வரை வெல்லும் வாய்ப்பு!

மனதை வருடக்கூடிய பல தமிழ்த் திரைப்பட மற்றும் உள்ளூர் பாடல்கள் வெளிவந்துள்ளது. வானொலி வாயிலாக பல பாடல்களை ஒலியேற்றி வரும் ராகா 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை வெளிவந்த சிறந்த 500 பாடல்களை ஒலியேற்றுவது மட்டுமின்றி போட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28 தொடக்கம் மார்ச் 3 வரை நேயர்கள் தங்களுடைய விருப்ப பாடல்கள் இந்தச் சிறந்த 500 பாடல்களில் இடம்பெற ராகாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான raaga.my எனும் அகப்பக்கத்தை நாடி வாக்களித்துள்ளார்கள்.

மார்ச் 4-ஆம் தேதி தொடக்கம் 8-ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 500 பாடல்கள் காலை 9 முதல் இரவு 7 வரை ராகாவில் இடம்பெறும். இடம்பெறவுள்ள இப்பாடல்கள் எந்த இடத்தைப் பிடித்துள்ளது எனும் கேள்வியை ராகாவின் அறிவிப்பாளர்கள் படைக்கும் நிகழ்ச்சியில் கேட்கப்படும். சரியான பதிலைச் சொல்லும் வெற்றியாளருக்கு ரிம 100 வழங்கப்படும். இப்போட்டியின் வாயிலாக ரிம 2000 வரை வெல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.