துன் மகாதீரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி!

0
2

பெட்டாலிங் ஜெயா, ஆக.15-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை நிகழ்ச்சியில் திடிரென ஏற்பட்ட கலவரம் தாம் எதிர்பாராத ஒரு சம்பவம் என பார்ட்டி பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனினும், இதை சில தரப்பினர் முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என தாம் கருதுவதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது உண்மை. ஆயினும், நம்மைப் போலவே ஒரு சிலர் உடையணிந்து கொண்டு உள்ளே நுழைந்திருக்கலாம். இது எதிர்பாராதது.

நாம் அரசியல் கட்சிகள் என்பதால் யார் நல்லவர் கெட்டவர் என்று கண்டுபிடிக்கும் திறன் நம்மிடம் இல்லை என பார்ட்டி பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகைதீன் கூறினார்.