பெட்டாலிங் ஜெயா, ஆக. 15
புதன்கிழமை அறிவிக்கப்படும் புதிய பெட்ரோல் நிர்ணய விலையில் ஏற்றம் காணப்படுமென்ற செய்தி வாட்சாப்பில் வைரலாகப் பரவுகின்றது. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்ந்து வெ. 2.18 காசுக்கு விற்கப்படுமென்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ரோன் 97 பெட்ரோல் விலை 7 காசு உயர்வு கண்டு 2.46 காசுக்கும் டீசல் விலை 1 காசு உயர்ந்து வெ. 2.07 காசுக்கு விற்கப்படுமென்ற செய்தி வாட்சாப்பில் வைரலாகப் பரவி வருகின்றது.

கடந்த 3 வாரங்களாக பெட்ரோல் விலை உயர்வு கண்டு வரும் நிலையில் இவ்வாரம் அதன் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகின்றது. இந்த முறையும் பெட்ரோல் விலை உயர்வு கண்டால், தொடர்ச்சியாக 4 வாரங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படும் நிலை உருவாகும். இது மக்கள் மத்தியில் மன உளைச்சலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான செய்திகளும் வாட்சாப்பில் வைரலாகப் பரவுவதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.