புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பாசீர் கூடாங்கில் 111 பள்ளிகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பாசீர் கூடாங்கில் 111 பள்ளிகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன

பாசீர் கூடாங், மார்ச் 16-

ஜோகூரில் பாசீர் கூடாங்  வட்டாரத்தில் இன்னமும் 111 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கிம் கிம்  ஆற்றில் நச்சு ரசாயன கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் பாசீர் கூடாங் வட்டாரத்தில் 111 பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதை கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் உறுதிப்படுத்தினர்.

கிம் கிம் ஆற்றில் ரசாயன கழிவுகள் வீசப்பட்டதால் அங்கு மோசமான நச்சு ரசாயன தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது. இம்மாதம்  ஏழாம் தேதி முதல்  அங்கு ஏற்பட்ட நச்சு இரசாயனம் சுற்றுப்புற பாதிப்பினால் இது வரை ஆயிரத்திற்கும் மேற்படடோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்களாவர்.

பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என மஸ்லி மாலேக்  கூறினார். கிம் கிம் ஆற்றில் மிகவும் மோசமாக தூய்மை கேட்டிற்கு உள்ளான பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமையில் இருந்து 90க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நியூசிலாந்தில் கிறிஸ்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பயிலும் மலேசிய மாணவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி டாக்டர் மஸ்லி மாலேக் கேட்டுக்கொண்டார்.

நியூசிலாந்தில் 308 மலேசியா மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களில் எவரும் பாதிக்கப்படவில்லை என இன்று பந்திங்கில் மாஷா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய போது  அவர் இதனை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன