புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வீடமைப்பு  திட்டங்களில் 100 விழுக்காடு தொழில்துறை கட்டுமான முறை அமல்!  -அமைச்சர் ஜூரைடா 
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

வீடமைப்பு  திட்டங்களில் 100 விழுக்காடு தொழில்துறை கட்டுமான முறை அமல்!  -அமைச்சர் ஜூரைடா 

நீலாய், மார்ச் 16-

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுப்படி விலை வீடமைப்பு திட்டங்களிலும் தொழில்துறை கட்டுமான முறை (ஐபிஎஸ்) முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த  முறையை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை பயன்படுத்துவதற்கு ஏதுவாக கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு கொள்கைக் கேற்ப இந்நடவடிக்கை அமைந்திருப்பதாக  அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

“கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் பேசிக் கொண்டிருந்த ஐபிஎஸ் முறையை அமல்படுத்த வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. இது மலிவானது, துரிதமானது என்பதால் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த முறையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றார் ஜூரைடா.

“நமது சொத்துடமை மற்றும் வீடமைப்பு துறையின் நீடித்த மேம்பாட்டிற்கு இது இன்றியமையாதது” என்று இங்கு எம்ஜிபி சானி  ஐபிஎஸ் நிறுவனத்தின் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்ஜிபி  நிறுவனத்தின்  குழும நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ லிம் ஹோக் சான் மற்றும் சானி மலேசியா நிர்வாக இயக்குநர் மா ரோங் குவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன