புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்திரா காந்திக்கு பாலர் பள்ளி ஏற்பாடு;”மித்ரா’ நிதி வழங்க இணக்கம் -டத்தோ மோகன் ஷான் தகவல்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திரா காந்திக்கு பாலர் பள்ளி ஏற்பாடு;”மித்ரா’ நிதி வழங்க இணக்கம் -டத்தோ மோகன் ஷான் தகவல்

ஈப்போ மார்ச்  17-

தனது பிள்ளையை மீட்க கடந்த 11 ஆண்டுகள் போராட்டம் நடத்தி வரும் எம் . இந்திரா காந்திக்கு பாலர் பள்ளியை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

பெரும்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

இதற்கு “மித்ரா’ நிதி வழங்க முன் வந்துள்ளது என்று நேற்று இங்குள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டத்தில் நடைபெற்ற தக்‌ஷாயணி சிவம், மோகனா சிவம் மற்றும் சரஸ்வதி சிவம் ஆகிய சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர்  செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைக் கூறினார் .

இந்திரா காந்தியின் மகள் இன்னமும் எங்கு உள்ளார் என்று அரசாங்கத்தால் எதுவும் கூற இயலவில்லை அது மௌனமாக இருந்து வருகிறது. இந்த சிறுமி வெளிநாட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளது.

அதற்கு சாத்தியம் இல்லை என்றால் உள் நாட்டில் மறைத்து வைத்திருக்கும் அந்த சிறுமியை கண்டுபிடிக்க ஏன் தாமதம் என்று கேள்விகளைத் தொடுத்த டத்தோ மோகன் ஷான் அதற்கு முழு பொறுப்பினை அரசாங கம் மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில பேசிய அவர் , இங்கு பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டுள்ள இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சிவம் சிறந்த சேவையாளர் மற்றும் சிறந்த முறையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இநத நிகழ்வில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் , சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் உட்பட பலர் கலந்துக்கொண்டு பரத நாட்டிய அரங்கத்தைக் கண்ட மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன