புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரந்தாவ் இடைத்தேர்தல்; அதிர்ச்சியை ஏற்படுத்துவோம் -பிகேஆர் நம்பிக்கை
அரசியல்முதன்மைச் செய்திகள்

ரந்தாவ் இடைத்தேர்தல்; அதிர்ச்சியை ஏற்படுத்துவோம் -பிகேஆர் நம்பிக்கை

கோலாலம்பூர், மார்ச் 17-

ரந்தாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுடியோன் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் குறுகிய வாக்குகளில் வெற்றி பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் என்பதோடு நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் ஆகவும் இருந்துள்ளார்.

இதுதவிர பல ஆண்டுகாலம் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அம்னோவின் துணைத் தலைவராகவும் இருந்து வரும் அவரை வீழ்த்துவது  சாதாரண காரியமல்ல. இருந்த போதிலும் இம்முறை அவரை வீழ்த்த முடியும் என சைபுடின் கூறினார்.

தேசிய முன்னணியின் வேட்பாளர் வலுவானவராக இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு உந்து சக்தி நம்பிக்கை கூட்டணியின் உறுப்பு கட்சிகளிடையே இருந்து வருகிறது.

இந்த அடிப்படையில் பிகேஆர் வேட்பாளர் டாக்டர்  ஸ்ரீராம் வெற்றிக்காக  நம்பிக்கை கூட்டணியின் உறுப்பு கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என சைபுடின் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன