முகப்பு > கலை உலகம் > ராகாவின் நடன சூறாவளி இறுதிச் சுற்று : 20 பேர் தேர்வாகினர்!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ராகாவின் நடன சூறாவளி இறுதிச் சுற்று : 20 பேர் தேர்வாகினர்!

சுபாங், மார்ச் 18-

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-ஆம் தேதி சுபாங் மைடின் பேராங்கடியில் நடந்த ராகாவின் நடன சூறாவளி நடனத் தேர்வில் 20 குழந்தைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.

மலேசியாவிலுள்ள குழந்தைகளின் நடனத் திறமையைக் கண்டறிய வேண்டும் எனும் நோக்கத்திற்காக இந்த ராகாவின் நடன சூறாவளி போட்டியில் 6 முதல் 8 வயது மற்றும் 9 முதல் 11 வயது என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் மிகச் சிறப்பாக நடனமாடி நடுவர்கள் மற்றும் வந்திருந்த பார்வையாளர்களின் கைத் தட்டல்களைப் பெற்றார்கள். ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா, நடிகர், பாடகர், தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட டேனிஸ் குமார் மற்றும் ஒடிசி நடனக் கலைஞர் சிவகாமி நடுவர்களாக பணியாற்றினார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 20 போட்டியாளர்கள் எதிர்வரும் மார்ச் 23-ஆம் தேதி இப்போட்டியின் இறுதிச் சுற்றில் களமிறங்கவுள்ளார்கள். ஒவ்வொரு பிரிவின் முதல் நிலை வெற்றியாளர் ரிம 2,000 ரொக்க பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருகின்றது.

மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன