செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > செல்வா பாண்டியருக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

செல்வா பாண்டியருக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழர் தேசிய கருத்தியல் எனும் நவீன அறிவுசார் அரசியல் தத்துவத்தை தமிழர்களுக்கு வழங்கி, 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருள் சூழ்ந்து காணப்படும் தமிழர்களின் அரசியலுக்கு தன் உயிரால் ஒளி கொடுத்து வழிகாட்டிச் சென்றவர் தமிழர் தேசியத் தந்தை செல்வா பாண்டியர் அவர்கள்.

தமிழர் தேசிய தந்தை அவர்கள் தன் இன்னுயிரால் தமிழின இளைஞர்களுக்கு தமிழர் தேசிய அரசியல் ஒளியூட்டி சென்ற மார்ச் 21ஆம் நாளை தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக செல்வா பாண்டியர் நிறுவிய தமிழர் நடுவம் அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழர் தேசிய ஒளியூட்டி நாளை நினைவுகூரும் விதமாக, மலேசியத் தமிழர்கள் சார்பில் மார்ச் 23 அன்று மாலை 6 மணி அளவில், SENTUL CURRY HOUSE உணவக அரங்கில் “தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்” வழிபாடும் தமிழர் தேசிய கருத்துரை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

ஒளியூட்டியின் அறிவொளியைப் பெற அனைத்து தமிழ்க்குடி உறவுகளையும் நிகழ்விற்கு அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டு குழுவினரான தமிழர் நடுவம் மலேசியா மற்றும் தமிழர் களம் மலேசியா அமைப்பினர்.

தமிழர் தேசிய தந்தையவர்களின் பேராற்றலையும் அவர்தம் தமிழரின மீட்புக் களமாடல்களையும் காவியமாக்கிய “பாண்டிய நிலா” எனும் நூல் ஒளியூட்டி நாள் நிகழ்ச்சியில் வெளியிடப்படும். இந்நூலானது தமிழர்களுக்கு தன் எழுத்தாற்றல் மூலமாக உலக அரசியல் கற்பித்து வரும் டென்மார்க் நாட்டை சேர்ந்த கி.செ.துரை மாஸ்டர் அவர்களால் படைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காவியமாகும்.

தமிழினப் பெருங்குடி மக்கள் தமிழர் தேசிய ஒளியூட்டி நாளில், தமிழர் தேசிய தந்தையான பாண்டிய நிலா செல்வா பாண்டியரின் பேரொளி பெற்றிட ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

– தமிழ்ப்புகழ் குணசேகரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன