அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எம்விஎஸ்கே புரொடக் ஷன் ஏற்பாட்டில் ஆணழகன் மற்றும் அழகுராணி தேர்வு
சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்விஎஸ்கே புரொடக் ஷன் ஏற்பாட்டில் ஆணழகன் மற்றும் அழகுராணி தேர்வு

கோலாலம்பூர், மார்ச் 18-

எம்விஎஸ்கே புரொடக் ஷன் சிறந்த ஆணழகன் மற்றும் அழகுராணி போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டிக்கான தேர்வு சுற்று மார்ச் 25ஆம் தேதி தலைநகர், ஜாலான் ஈப்போ, முத்தியாரா காம்ளெக்ஸ் 4ஆவது மாடியில் நடைபெறும்.

காலை மணி 9.00 தொடங்கி மாலை மணி 5.00 வரை நடைபெறும் இத்தேர்வு சுற்றில் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய மலேசிய பிரஜைகள் மட்டுமே பங்கேற்க முடியும் ௭ன்று எம்விஎஸ்கே புரொடக் ஷன் தோற்றுநர் கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

இதில் 70 விழுக்காடு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  மலேசிய கலை உலகம் மற்றும் விமர்சகன் ஆகியவற்றின் ஆதரவில் எம்விஎஸ்கே புரொடக் ஷன் முதன் முறையாக கடந்தாண்டு
ஆணழகன் மற்றும் அழகுராணி போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

எம்விஎஸ்கே புரொடக் ஷனின் ஆணழகன் மற்றும் அழகுராணி தேர்வு சுற்றில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 016-4990152 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

One thought on “எம்விஎஸ்கே புரொடக் ஷன் ஏற்பாட்டில் ஆணழகன் மற்றும் அழகுராணி தேர்வு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன