அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் ஆய்வுக் கட்டுரை எழுதும் பட்டறை
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் ஆய்வுக் கட்டுரை எழுதும் பட்டறை

கோலாலம்பூர், மார்ச் 19-

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் கடந்த 9,10 மார்ச் 2019ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை எழுதவிருக்கும் பட்டறை மிகவும் சிறப்பாக கிரேண்ட் பெசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. சுமார் 22 ஆசிரியர்கள், முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பட்டறையின் பயிற்றுனர் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் விரைவுரையாளர் டாக்டர் சரன்ஜிட் சுவாரன் ஆவர்.

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தின் இவ்வருடத்திற்கான முதல் நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது. சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஆய்வுக் கட்டுரை எழுதும் வழிமுறைகளை மிகவும் துல்லியமாக விளக்கிக் கூறினார்.

புத்தாக்க தமிழ் மொழியியல் கழகத்தின் தலைவர் முனைவர் திரு.முனீஸ்வரன், இப்பட்டறை தங்களின் மேற்கல்வியை நல்ல முறையில் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த தூண்டுகோலாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனக் கூறினார். பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதோடு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

உஷா : முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் எனக்கு இப்பட்டறை எனது ஆய்விற்கு ஓர் ஊன்றுகோளாக அமைந்தது. இப்பட்டறை பயிற்றுனரின் தெளிவுரை என்னுடைய ஆய்விற்கு ஒரு விடிவை தந்தது. அதுமட்டுமுன்றி, இப்பட்டறையை ஏற்பாடு செய்த முனைவர். முனீஸ்வரன் குமார் அவர்களுக்குத் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹேமலர்ஷ்வினி : இப்பட்டறையை வழிநடத்திய பயிற்றுனருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இப்பட்டறைக்கு வருவதற்கு முன் இருந்த பொது அறிவைவிட இன்னும் கூடுதல் தகவல்கள் பெற்றுள்ளேன். இது எனது ஆய்வைத் தொடங்குவதற்கு ஓர் ஊக்கமாக அமைந்துள்ளது. எனது ஆய்வின் தலைப்பையொட்டி பல பயனுள்ள தகவல்களை எடுத்துரைத்ததற்கு நன்றி.

மீரா தேவி : எனது இளங்கலை படிப்பிற்கான ஆய்வை மேற்கொண்டிருப்பதால் எனக்கு ஆய்வைப் பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தது. இப்பட்டறை ஆங்கிலத்தில் நடத்தப்பட்டிருந்தாலும் பயிற்றுனரின் எளிமையான விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்ததுள்ளது.

தினேஸ்வரி : எனது ஆய்வை மேற்கொள்வதற்குச் சில சிரமங்களை எதிர்நோக்கியதால் இப்பட்டறை என்னைச் சில குழப்பங்களிலிருந்து விடுவித்துள்ளது. நான் நிறைய ஆய்வு கட்டுரைகள் படித்திருந்தும் எனது ஆய்வின் தொடர்பான குழப்பங்கள் இருந்து கொண்டே இருந்தன. இப்பட்டறையின் பயிற்றுனரின் ஆலோசனையின் வழி எனது ஆய்வை மேற்கொள்வதற்கான எளிய முறையைக் கற்றுக் கொண்டு பயனடைந்துள்ளேன்.அதுமட்டுமின்றி, எனக்கு புதிய உறவுகள் கிடைத்துள்ளது. இப்பட்டறையை ஏற்பாடு செய்த முனைவர். மூனீஸ்வரன் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன