முகப்பு > அரசியல் > மஇகா தலைமைச் செயலாளர் பதவிக்கு திரும்புகிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி?
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகா தலைமைச் செயலாளர் பதவிக்கு திரும்புகிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி?

கோலாலும்பூர் மார்ச், 19-

மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) தலைமை செயலாளர் பதவிக்கு மீண்டும் டத்தோஸ்ரீ வேள்பாரி திரும்புவதாக செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் அப்பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் தலைமையகத்தில் சமர்ப்பித்தார்.

அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளதை அக்கட்சியின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியிருந்தார்.

அப்பதவியில் டத்தோஸ்ரீ வேள்பாரி தொடர்ந்து நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படும் என கடந்த மத்திய செயலவை கூட்டத்தில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

அப்படி தலைமைச் செயலாளர் பதவிக்கு திரும்ப தமக்கு விருப்பம் இல்லை என்பதை அவர் (வேள்பாரி) மறு உறுதிப்படுத்தும் பட்சத்தில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

அப்பதவியில் அக்கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் டத்தோ வி. எஸ். மோகன், கல்வித் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ பி. கமலநாதன் ஆகியோர் நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் டத்தோஸ்ரீ வேள்பாரி மீண்டும் தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அடுத்த மத்திய செயலவை கூட்டத்தில் அவரது விலகல் கடிதம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தலைமைச் செயலாளராக அவர் செயல்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன