அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பாசீர் கூடாங்கில் 46 இடங்கள் சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய அபாயம்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

பாசீர் கூடாங்கில் 46 இடங்கள் சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய அபாயம்!

இஸ்கந்தர் புத்ரி, மார்ச் 20-

பாசீர் கூடாங்கில் சுமார் 46 இடங்கள் சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக துணைக்கோள தரவு வழி கண்டறியப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ஆம் தேதி கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு சம்பவத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆய்வு முடிவுகளில் ஒன்றே இது என்று எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்.

“பாசீர் கூடாங்கில் சட்டவிரோத குப்பைக் கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய இடங்களை அடையாளம் காண இக்குழுவினர் துணைக்கோள தரவைப் பயன்படுத்தினர்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“மாநில அரசாங்கமும் ஊராட்சி மன்றங்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “என்று இங்குள்ள கோத்தா ஸ்கண்டாரில் கிம் கிம் ஆற்றில் ரசாயன கழிவு  கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

அந்த ஆற்றில் வீசப்பட்ட கழிவால் 4,000திற்கு மேற்பட்ட மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கிம் கிம் ஆற்றைத் தவிர்த்து மாசாய் ஆறு மற்றும் செமிலாங் ஆறு போன்றவற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை அமலாக்க தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன