வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பிரதமர் தம்பதியர் விபத்துக்குளானதாக வதந்தி!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பிரதமர் தம்பதியர் விபத்துக்குளானதாக வதந்தி!

கோலாலம்பூர், மார்ச் 20-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி அஸ்மா முஹமட் அலியும், நாடாளுமன்ற வளாகத்தில் விபத்தில் சிக்கியதாக, சமூக ஊடகங்களில் பரவிய செய்தியில் உண்மையில்லை. அது வதந்தி என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் கார் ஒன்று விபத்துக்குள்ளான புகைப்படம் இன்று பிற்பகல் தொடங்கி பரவி வருவதைத் தொடர்ந்து, பிரதமர் துறை அலுவலகம், அச்செய்தியை மறுத்துள்ளது.

அப்புகைப்படத்தில் உள்ளதுபோல், பிரதமரும் அவரது துணைவியாரும் எந்தவொரு விபத்திலும் சிக்கவில்லை என்று பிரதமர் துறை அலுவலகம் கூறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன