அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எம்.ஜி.ஆர் விஜயசேகரின் துணைவியார் சாலை விபத்தில் பலியானார்!
முதன்மைச் செய்திகள்

எம்.ஜி.ஆர் விஜயசேகரின் துணைவியார் சாலை விபத்தில் பலியானார்!

நாட்டின் மூத்த கலைஞர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர் விஜயசேகரின் மனைவியும், சீவில்ட் ஆலய விவாகரத்தில் பிரபலமான எம்.ஜி. விஜயின் தாயாருமான விஜயா  இன்று, புதன்கிழமை பிற்பகல் வேளையில் சாலை விபத்தொன்றில் அகால மரணம் அடைந்திருகின்றார்.

கோலாலம்பூரில், ஜாலான் யுனிவர்சிட்டி அருகே, காரில் இருந்து இறங்கி குடிப்பதற்கு நீர் வாங்க சாலையைக் கடக்க முற்பட்ட வேளையில், அவர் கார் ஒன்றினால் மோதப்பட்டு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பலியாகினார்.

அவரின் நல்லுடல், NO 25, JALAN SS 25/32 தாமான் மாயாங், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள,  விஜயசேகரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

குடும்பத் தலைவியை இழந்து துயறுரும் அவர்களின் குடும்பத்திற்கு அநேகன் இணையச் செய்திதளத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன