அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > காதலியுடன் மனக்கசப்பு தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட இந்திய இளைஞர் மரணம்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காதலியுடன் மனக்கசப்பு தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட இந்திய இளைஞர் மரணம்!

மஞ்சோங், மார்ச் 20-

சித்தியவான் கம்போங் பிந்தாங் உள்ள வீட்டில் இந்திய இளைஞர் ஒருவர் தம்மை தாமே தீயிட்டு கொளுத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேராஜ் (வயது 21)  இன்று 6 40 மணி அளவில் உயிரிழந்தார்.

இந்த தகவலை மஞ்சோங் மாவட்ட மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. காதலியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக 21 வயதான அந்த இளைஞர் தம்மைத்தாமே தீயிட்டு கொளுத்தி கொண்டதாகக் கூறப்படுகின்றது.

90 விழுக்காடு தீப்புண் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன