அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மருத்துவர் மர்ம முறையில் மரணம்!  
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மருத்துவர் மர்ம முறையில் மரணம்!  

போர்ட்டிக்சன், மார்ச் 20-
மருத்துவர் ஒருவர் இங்குள்ள ஹோட்டல் அறை  ஒன்றில் இறந்து கிடக்க காணப்பட்டார்.     அந்த 34 வயது இளைஞர் இங்குள்ள ஜாலான் பந்தாய், 1ஆவது மைலில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென் அய்டி ஷாம் முகமது தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.00மணியளவில் ஹோட்டல்  பணியாளர்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறினார். “சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற போலீசார் அவ்விளைஞர் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்ததைக் கண்டனர். அவர் இறந்துவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்தினார் ” என்றார் அய்டி ஷாம்.

“அந்த இளைஞரின் இடது கையில் ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊசியைப் பயன்படுத்தி அவர் தனது உடலில் சோடியம் குளோரிடா திரவத்தைச்  செலுத்தியுள்ளது புலனாய்வு வழி தெரிய வந்துள்ளது” என்று அறிக்கை ஒன்றின் வழி அய்டி ஷாம் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை யில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார். இதனை திடீர் மரணம் என்று போலீஸ் வகை பிரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன