அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அரசாங்க உயர் கல்வி நிலையமே எனது முதல் தேர்வு: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
சமூகம்முதன்மைச் செய்திகள்

அரசாங்க உயர் கல்வி நிலையமே எனது முதல் தேர்வு: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ஷாஆலம், மார்ச் 20-

தமன் ஸ்ரீ முடா, கோத்தா கமுனிங், ஷா அலாம் உட்பட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த எஸ்பிஎம் மற்றும் எஸ் டி பி எம் தேர்வு எழுதிய 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசாங்க உயர் கல்வி நிலையங்களில் இணைந்து பயில விரும்பும் மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது.

மலாயாப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உமாகாந்தன் கிருஷ்ணன் , சிவம் ஜி. தமிழ் செல்வம் மற்றும் கஸ்தூரி முத்தையா ஆகியோர் அரசாங்க உயர் கல்வி கழகங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, அவர்களின் எஸ் பி எம், நஎஸ் .டி பி .எம் தேர்வு முடிவுகளுக்கு ஏற்ப எந்தெந்த துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தகவல்களையும் தெரிவித்தனர்.

அதோடு அரசாங்க உயர் கல்வி நிலையங்களில் கல்வியை முடித்து வெளியேறிய பின்னர் எதிர்காலத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்பு போன்ற விவகாரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை உமாகாந்தன் ,சிவம், கஸ்தூரி ஆகியோர் வழங்கினர் .

மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு குழு ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினர் கணபதிராவ் இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்ததோடு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உணவு வசதிக்கான செலவையும் ஏற்றுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன